Cyclone Alert… “இது சும்மா ட்ரைலர், இனி தான் மழையின் ஆட்டமே”…. தமிழகத்தை புரட்டி எடுக்கப்போகும் கனமழை…!

Spread the love

கன்னியாகுமரி கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. இன்று முதல் நாளை காலை வரை டெல்டா பகுதிகள் முதல் தென் தமிழகம் வரை பலத்த கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இன்று முழுவதும் இரவு நேரத்திலும் கனமழை தொடரும்.

இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டல மேலடுக்க சுழற்சி மெதுவாக புயலாக மாறுகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Nanthini

Recent Posts

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

5 minutes ago

BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பின்னடைவு…. கலக்கத்தில் திமுக….!!

வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…

11 minutes ago

BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…

16 minutes ago

BREAKING: திமுக முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு…. அதிர்ச்சியில் தலைமை….!!

திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…

20 minutes ago

BREAKING: எடப்பாடி, சேலம் தெற்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலை…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

26 minutes ago

BREAKING: 46 தொகுதிகளில் திமுக முன்னிலை…. அதிமுக, தவெக நிலை என்ன…?

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

34 minutes ago