“இந்திய அணியை மண்டியிடச் செய்வோம்” நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.. மன்னிப்பு கேட்ட சுக்ரி கான்ராட்..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “இந்திய அணியை மண்டியிடச் செய்வோம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ஒருநாள் தொடரில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பின், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதாவது “இந்திய அணியை மண்டியிடச் செய்வோம் என்று நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, அந்த வார்த்தை சொன்னது தவறுதான்” என்று வருத்தம் தெரிவித்தார்.