அடச்சீ..! சிறை கைதியுடன் தகாத உறவு…. வசமாக சிக்கிய பெண் அதிகாரிக்கு சிறை தண்டனை…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
இங்கிலாந்தின் வெதர்பி சிறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர் மேகன் கிப்சன் . இந்த சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளார்கள். இந்நிலையில் மேகன் கிப்சன் அங்கிருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இதனையடுத்து இதுகுறித்த விசாரணையில், அவர் அந்தக் கைதிக்குச் சிறைக்குள் போதைப்பொருளும் வழங்கியதும், அவரோடு தகாத உறவில் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து மேகன் கிப்சன் கைது செய்யப்பட்டு, லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.