சற்றுமுன் பரபரப்பு… விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம் உருவானது…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

சென்னையில் கடந்த சில நாட்களாகவே முக்கிய புள்ளிகளின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மோப்பநாய், நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. விஜயபாஸ்கர் வீட்டுக்கு ஏற்கனவே இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.