சமீபத்தில் Redmi A4 5G இந்தியாவில் மிகவும் மலிவான பட்ஜெட் விலை போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. Xiaomi நிறுவனம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக இந்த Redmi A4 5G போனை வெளியிட்டது. இந்த போனில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் airtel 5g நெட்வொர்க்கை இது ஆதரிக்காது என்பதுதான். அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

Redmi A4 5G போன் ஸ்னாப் டிராகன் 4s ஜென் 2 சிப்செட்டை கொண்டு இருக்கிறது. மேலும் 1200×720 பிக்சல் 120 ஹெச் ரெஃப்ரெஷ் ரேட் 6000 நிட் பிரைட்னஸ் 6.88 ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த போனானது ஆண்ட்ராய்டு 14இல் இயங்குகிறது. பேட்டரி 5160 எம்ஏஹெச் மற்றும் 18 வாட்ச் சார்ஜர் மூலமாக விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த Redmi A4 5G ஸ்மார்ட் போன் SA ( Standalone) 5ஜி நெட்வொர்க்கில் மட்டுமே இயங்குகிறது. ஆனால் ஏர்டெல்லின் 5g NSA ( Non Standalone) நெட்ஒர்க்கை பயன்படுத்துகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த போனில் 5ஜி வேகத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. 4ஜி வேகம் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் SA ( Standalone) தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது என்பதால் jioவின் 5ஜி நெட்வொர்க்கில் இந்த போன் நன்றாக வேலை செய்கிறது. இந்த ஒரு காரணத்தால் தான் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை Redmi A4 5G போனில் பயன்படுத்த இயலாது.
