விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷ்ணுவர்தன். அவரது தந்தை தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் கே சேகர் ஆவார். இவரது தம்பி கிருஷ்ண குலசேகரன் தமிழ் திரை உலகில் நடிகராக இருக்கிறார். விஷ்ணுவர்தன் பல நல்ல கதையை கொண்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவைதான் விஷ்ணுவர்தன் இயக்கிய படங்களா என பலருக்கும் தெரியாது. அவர் இயக்கிய படங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விஷ்ணுவர்தன். இந்த திரைப்படத்தில் அல்லரி நரேஷ் தியா நாசர் ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து பாடும் புதிய முறை இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன். இந்த திரைப்படத்தில் ஆர்யா பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் விஷ்ணுவர்தன் என்றே சொல்லலாம்.

2006 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் பட்டியல் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் பரத் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2007 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து விஷ்ணுவர்தன் பில்லா திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படத்தில் அஜித் டூயல் ரோலில் நடித்திருப்பார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
2009 ஆம் ஆண்டு ஆர்யா த்ரிஷா ஆகியோரை வைத்து சர்வம் திரைப்படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன். பிறகு 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் அஜித் குமார் ஆர்யா நயன்தாரா நடித்திருந்தனர்.

2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினர் விஷ்ணுவர்தன். அடுத்ததாக தற்போது அதிதி சங்கர் மற்றும் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ் முரளியை வைத்து நேசிப்பாயா என்ற படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
