பெரும்பாலும் மக்கள் ஆக்ஷன், திரில்லர், காதல், சஸ்பென்ஸ் மற்றும் திகில் ஆகியவை உள்ள படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். அதிலும் நகைச்சுவை கலந்த திகில் படமாக இருந்தால் அந்த அனுபவம் மக்களை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம். இது போன்ற படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்ப்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஹாரர் கலந்த காமெடியோடு சிரிக்கவும் வைக்கும் திரைப்படம் ரோமன்சம். இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் உண்மையில் வாழ்க்கை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அது குறித்து பார்க்கலாம்.

ரோமன்சம் என்ற படம் 2023 வருடம் திரையரங்குகளில் வெளியாகிய வெற்றி பெற்றது. இந்த படத்தை ஜூத்து மாதவன் இயக்கியுள்ளார். மலையாள மொழியில் வெளியான இந்த படம் திகில் கலந்த காமெடி படமாக உள்ளது. இந்த படத்தில் சௌபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், சஜின் கூப், சிஜு சன்னி, அபின் பினோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள் . இந்த படத்தின் கதை என்னவென்றால் மருத்துவமனையில் இருக்கும் ஜிபி கதாபாத்திரத்தில் இருந்து தொடங்குகிறது. 7 நாட்கள் கோமா நிலைக்கு பிறகு அவர் சுயநலவை பெறுகிறார். அதன் பிறகு மருத்துவமனை செவிலியரிடம் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து கேட்கிறார்.

அப்போது முழுக்கதையும் கூறுகிறார் செவிலியர். பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் ஏழு நபர்களை சுற்றி வருகிறது ரோமன்சம். ஒருநாள் அவர் ஆவிகளை வரவழைப்பதற்கு Ouija என்ற பலகை பயன்படுத்துகிறார்கள். அது வினோதமாக இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து அந்த விளையாட்டை விளையாடும்போது முதலில் ஆவி வந்துவிட்டது என்று ஜெபி தன்னுடைய நண்பர்களை ஏமாற்றுகிறார். ஒரு நண்பரை தவிர அனைவருக்கும் ஆன்மா வந்துவிட்டது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆத்மா வரவில்லை.

கதை முன்னேறி ஆவி உண்மையில் வந்துவிட்டது என்பது தெரிகிறது .அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் 1.75 முதல் மூன்று கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 2027 ஆம் வருடத்திற்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரமான திகில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ரோமன்சன் படம் நிச்சயமாக பார்க்கலாம்.
