தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது.
அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார். படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு விஜய் எதிர்பார்த்தபடி அவருக்கு அமையவில்லை. படமும் படுதோல்வி அடைய விஜய்யும் கடுமையான விமர்சனங்களையும், உருவ கேலியையும் சந்தித்தார்.
தேவா படத்துக்கு பிறகு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தார் விஜய். இதில் அஜித்தும் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து எஸ்.ஏ.சி மீண்டும் விஜய்யை வைத்து விஷ்ணு என்ற படம் இயக்கினார். அந்தப் படம் பெற்ற வெற்றியாலும், அதில் சங்கவியின் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருந்ததாலும் இந்தப் படத்திலும் விஜய்க்கு ரசிகர்களிடையே மவுசு கூடியது.
இந்நிலையில் விஷ்ணு படம் குறித்து பேசிய பாலாஜி பிரபு, விஜய் நடித்த விஷ்ணு படம் 1995 படம் ரிலீஸ் ஆனது. ரிலீசான இரண்டு மூன்று நாட்களில் தினத்தந்தியில் ஒரு விளம்பரம் கொடுத்தார் விஜய். அதில் ஒரு சின்ன நடிகனை வைத்து ஒரு பெரிய படத்தை எடுத்து எனக்கு மிகப்பெரிய பெயரை புகழையும் தேடித்தந்த ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் எம்.பாஸ்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று விஜய் என்று கையெழுத்து போட்டு தினத்தந்தியில் வந்தது. ஆனால் நாங்கள் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தும் எங்களுக்கு தேதி கொடுக்கவில்லை என்று பேசியுள்ளார்.