உலகளவில் மிகவும் அச்சுறுத்தும் ஒரு விஷயம் காற்று மாசுபாடு. மனிதன் மாட்டுமல்ல எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியமான ஒன்று. நம் வளிமண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸிஜன் கரிவாயு மற்றும் சில வாயுக்கள் என பல வகைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சமச்சீர் அளவில் இருக்கும் போது எந்த பிரச்சனையும் வராது.

நகரமயமாக்கப்படுவதாலும் மரங்கள் வெட்டப்பட்டு வீடுகள் ஆக்கிரம்பிப்பதாலும் வாகனங்கள் பட்டாசுகள் போன்றவற்றின் புகைகளால் காற்று மிகவும் மாசுபடுகிறது. தற்போது டெல்லியில் காற்று மாசு என்பது மிகவும் தீவரத்திலிருந்து மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தீபாவளிக்கு பிறகு பட்டாசுகள் போன்றவற்றை வெடித்ததாலும் குளிர்காலம் என்பதாலும் டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாகி மூடுபனி போல் மூடி இருக்கின்றது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ( CPCB) தரவுகளின் படி டெல்லியின் ஒட்டுமொத்த 24 மணி நேரம் சராசரி காற்று தர குறியீடு (AQI) இன்று வியாழக்கிழமை காலை வரை 379 இல் இருந்தது. இது மிகவும் மோசமான ஒரு அளவு ஆகும். டெல்லியின் பல்வேறு இடங்களில் கடுமையான காற்று மாசுபாட்டின் உச்சத்தில் இருக்கின்றது. இதனால் மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது.

அரசாங்கம் டெல்லியின் காற்று மாசுபாட்டை குறைக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியின் காற்று மாசுபாட்டை குறைக்க ஒரு சில முயற்சிகள் எடுக்கும் போது அதனால் நமக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதில் மேகவிதைப்பு எனப்படும் செயற்கை மழை வருவதற்கான தூண்டக்கூடிய வழிகளை கண்டறிந்து செயல்படுத்துவது. மேலும் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த Wild Augmentation Purifying Unit (WAPU) சாதனங்கள் சாலையோரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. இவை போன்ற பல முயற்சிகளை அரசாங்கம் செய்து வருகிறது. இதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
