தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.

பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகனுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் ஊர்வசியுடன் நடிக்க மறுத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் இருந்தே ஊர்வசியை ஒரு தங்கையாக பார்த்ததால் நான் ஊர்வசியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு எவ்வளவோ பேசி புரிய வைத்த பிறகு அவர் ஊர்வசியுடன் ஜோடியாக நடித்த நிலையில் சில காதல் காட்சிகளில் அவங்க எவ்வளவு கலராய் இருக்காங்க நான் இவ்வளவு கருப்பா இருக்க அவங்க கூட என்னால எப்படி ஒண்ணா பண்ண முடியும் என்று விஜயகாந்த் கேட்டு உள்ளார். பிறகு சில வற்புறுத்தல்களுக்கு பின்னர் அவரை நடிக்க வைத்தும் அவர் ஊர்வசியை நேருக்கு நேர் பார்த்து சில நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லையாம். இந்த தகவலை ஊர்வசி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதேசமயம் விஜயகாந்த் படப்பிடிப்பில் அனைவரிடமும் கலகலப்பாக பேசி நன்றாக நடந்து கொள்வாராம்.
