புது குண்டை தூக்கி போட்டாரே..! நாய்களை ஒழித்தால் இந்த நோய் கட்டாயம் வரும்… புதிய பரபரப்பை கிளப்பிய சீமான்..!!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தெரு நாய்களை ஒழித்தால் கட்டாயம் பிளேக் நோய் பரவும். அரசு முறையாக நடவடிக்கை எடுத்து ஒலிக்காமல் சமநிலைப்படுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். திண்டிவன பெண் கவுன்சிலர் பட்டியலென மக்களை காலில் விழ வைத்தது, கல்வி அறிவு இருந்தும் இதுபோன்று நடந்ததற்கு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும். எவ்வளவுதான் கல்வி அறிவு இருந்தாலும் ஒழுக்ககேடான செயல்களை தடுக்க முடியவில்லை இன்று வரை.

நம்முடைய நாம் தமிழர் கட்சியின் போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது. போராடும் மக்களின் பிரச்சினையை காவல்துறை ஒன்றும் தீர்க்கப் போவதில்லை, அரசு தான் தீர்க்க வேண்டும். காலம் கடந்து சென்று விட்டது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்று பாஜக அரசு கூறி இருந்தது. திட்டம் நிறைவேறினால் தான் தெரியும் யார் பதவியில் இருப்பார்கள், மறைந்து போவார்கள் என்று.