actor Vijayakanth

இனி அடுத்த விஜயகாந்த் நான்தான்… அவர் இடத்தை நிரப்ப தான் வந்திருக்கேன்… – இவனை யாராவது நிறுத்த சொல்லுங்கடா என பரிதாபங்கள் சுதாகர் மாதிரி அலறும் ரசிகர்கள்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் வாட்டர்மெலன் திவாகர். நடிப்பு அரக்கன் என்றும் அவரே அடிக்கடி கூறிக் கொள்கிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வாட்டர்மெலன் திவாகர் கூறியதாவது, நடிப்புன்னு எடுத்துக்கிட்டா சிவாஜி சாருக்கு அப்புறம் கமல்ஹாசன். அவருக்கு அப்புறம் நான்தான். ஒரு ஹீரோவுக்கு உண்டான எல்லா திறமையும் என்கிட்ட இருக்குது. ஆனா என்னை பார்த்து பயந்து நிறைய சூழ்ச்சிகள் செய்றாங்க. விஜய் சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க.

மதுரையிலிருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு பெரிய நடிகர் இதுவரைக்கும் வரலே. அந்த இடத்தை நிரப்ப தான் நான் வந்திருக்கேன். அவரைப் போலவே அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் நான் ஆவேன் என்று வாட்டர்மெலன் திவாகர் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இவனை யாராவது நிறுத்த சொல்லுங்கடா என்று பரிதாபங்கள் சுதாகர் சொல்வதை போல கலாய்த்து வருகின்றனர்.