actress radhika sarathkumar

இந்தி தெரியாது போடா… என்கிற பாணியில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார்… குவியும் பாராட்டு!

By Elango on மாசி 13, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 90களில் முன்னணியின் நாயகியாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது தாய்க்கிழவி என்ற படத்தில் அவர் பொன்னுதாயி என்ற மூதாட்டி கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது மேக்கப்பை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தாய்கிழவி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு இந்தி சரளமாக பேச வரும். ஆனால் நான் பேசமாட்டேன் என்று கூறினார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தி தெரிந்தாலும் பேச மாட்டேன் என்கிற ராதிகாவின் கொள்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.