actress Trisha

ஷூட்டிங் ஸ்பாட்டில் அங்கே இருப்பது போல இருந்தது… திடீரென நடிகை திரிஷா வெளியிட்ட வீடியோ வைரல்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

இப்போது நடிகை திரிஷா ஒரு வீடியோவை திடீரென வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே நாளை 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்த படம் ஸ்பெஷல் ஆக உள்ளது. எப்போதுமே இந்த படம் எனக்கு ஸ்பெஷலான படம்தான். ஏனென்றால் இந்த படத்தில் இருந்து தான் எனக்கு எல்லாமே துவங்கியது.

என்னுடைய முதல் சினிமாவில் அமீருடன் பணியாற்றியதை சந்தோஷமாக பார்க்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் கருப்பு படம் ரிலீஸ்சும் சூர்யாவுடன் தான் நடக்கப் போகிறது.

   

இதிலிருந்து ஒரு வட்டத்திற்குள் நான் வந்துள்ளதாகவே உணர்கிறேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றளவும் பாப்புலராக பேசப்படுகிறது. லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தை பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள் என்று நடிகை திரிஷா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.