விருந்தாவனில் 21 வயது வாலிபர் அபிக்யான் குப்தா என்பவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை அருந்த அவர் வாட்டர் கூலரைத் தொட்ட கணமே, அதில் பாய்ந்த பயங்கர மின்சாரம் அவரை உலுக்கியுள்ளது. இதனால் நிலைகுலைந்த அவர், அந்த வாட்டர் கூலரின் கம்பிகளை இரு கைகளாலும் பிடித்தவாறே நின்ற நிலையிலேயே மயக்கமடைந்தார். இந்த நெஞ்சை உலுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அபிக்யானுக்கு மின்சாரம் பாய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொது மக்கள், அவரைத் தொட்டால் தங்களுக்கும் ஷாக் அடிக்கும் என்ற பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அவருக்கு முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த அவரது தந்தை, தன் மகனுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து உடனடியாக ஓடிவந்து, தன் ஷூ அணிந்த கால்களால் வாட்டர் கூலரை எட்டி உதைத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த வாட்டர் கூலர் மீண்டும் அபிக்யான் மற்றும் அவரது தந்தை மீதே விழுந்தது. மகனைக் காப்பாற்ற தந்தை எடுத்த துணிச்சலான முயற்சி தோல்வியில் முடிந்து, அந்த இளைஞரின் உயிர் பரிதாபமாகப் பறிபோனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களில் வைக்கப்படும் வாட்டர் கூலர்களின் முறையற்ற பராமரிப்பு மற்றும் பாதுகாப்பற்ற தன்மை குறித்து நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு இளம் உயிர் பறிபோயிருப்பதாகக் கூறும் பொதுமக்கள், இதுபோன்ற மின்சாரக் கருவிகளைப் பொதுப் பயன்பாட்டில் வைக்கும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், பழுது ஏற்பட்டால் அதை உடனடியாகச் சரிசெய்யும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…