30 கூட்டத்துல பாத்துட்டேன்.. சும்மா சும்மா ஆம்புலன்ஸ் வருது… இனி இதுதான் நடக்கும் பாத்துக்கோங்க… EPS பகிரங்க எச்சரிக்கை..!!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

திருவண்ணாமலையில் சில தொகுதியில், மக்களை சந்தித்து இ.பி.எஸ் பேசுகையில்,

நான் பல கூட்டங்களில் கவனித்த பொழுது, கூட்டங்களுக்கு இடையே ஆம்புலன்ஸை அனுப்பி, இடையூறு செய்யும் கேவலமான செயலை மாடல் அரசு செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும், ஒன்னும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால், அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும். கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் வந்தால், மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? நான் இதை, 30 மேலான கூட்டத்தில் பார்த்து விட்டேன். நோயாளி யாருமே இல்லாமல், வெறும் ஆம்புலன்ஸ், கூட்டத்திற்கு இடையூறாக செல்கிறது.

   

எதிர்க்கட்சியினர் கூட்டம் நடந்தால், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மாறாக மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியே, தி.மு.க ஆட்சி. இது தொடர்பாக நாளை, காவல் துறையினரிடம் புகார் அளிப்பேன். அதிமுக ஆட்சியின் திட்டங்களை நிறுத்தியது திமுக. நீங்கள் என்னென்ன திட்டங்களை நிறுத்தினீர்களோ, அந்த திட்டங்களை எல்லாம் மக்களுக்காக வரும் ஆட்சியில் செய்வோம். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பசுமை வீடுகள், உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம். தேர்தல் வரும் போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றி, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக அறிவித்து கைவிட்ட மாதிரி தூய்மை பணியாளர்களையும் ஆம்போவென விட்டனர்.

   

போதைப் பொருள் பல வழிகளில் வந்துவிட்டதால், இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. அணைக்கட்டில் கலை அறிவியல் கல்லூரி, அகரம் கிராமத்தில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என பல திட்டங்கள் இந்த தொகுதிக்கு வழங்கினோம். 2026ம் ஆண்டு தேர்தல், இத்தனைக்கும் முடிவுகட்டப்போகிறது. மக்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்றார், பழனிசாமி.