கேரளாவில் 7 வயது சிறுமி ஸ்கூட்டரில் இருந்து விழுந்து பேருந்து மோதியதில் தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொழிஞ்சாம்பராவில் உள்ள செயின்ட் பால் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தவர் தான் நபிசாத் மிஸ்ரியா என்ற ஏழு வயது சிறுமி. பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் தனது தந்தையுடன் சிறுமி காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னாள் வந்த ஆட்டோ ரிக்ஷா பள்ளத்தை தவிர்ப்பதற்காக திடீரென்று பிரேக் போட்டு உள்ளது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் விழுந்தனர். அதேசமயம் சிறுமி மீது பின்னால் வந்த பேருந்து மோதியது. இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றார். பள்ளிக்கு சென்ற சிறுமி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
