காதலிக்க மறுத்த பெண்… வேறொருவரோடு திருமணம்… தினம் தினம் பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்டோபர்… கடைசியில் நடந்த கொடூரம்..!!

By Divyamayakannan on ஆவணி 19, 2025

Spread the love

கன்னியாகுமரி தாராவி பகுதியை சேர்ந்தவர் ஜான் கிரிஸ்டோபர் (57) என்றக்  கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா பாய் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஸ்டெல்லா பாய் உணவருந்து கொண்டு இருந்து சமையத்தில்  அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு கிறிஸ்டோபர் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டார் . ரத்த வெள்ளத்தில் கிடந்த  ஸ்டெல்லா பாயை கணவர் கோபாலகிருஷ்ணன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுக்குறித்துத்   தகவல் அறிந்து வந்து போலீசார்  கிறிஸ்டோபரை கைது செய்து விசாரித்தனர்  .

அப்போது இளமைக்காலத்தில் ஸ்டெல்லா பாயை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் கிறிஸ்டோபர். அவருடைய காதலை சொல்லி திருமணம் செய்து கொள்வதாக உள்ளார் . இருப்பினும் கிறிஸ்டோபரை நிராகரித்து விட்டு வேற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து ஆறே மாதத்தில் கணவனைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார். அதற்குப் பிறகும் கிறிஸ்தோபர் ஸ்டெல்லாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.

   

பத்து வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ஸ்டெல்லா கிறிஸ்டோபரின் பாலியல் தொந்தரவை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபாலகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவரை திருமணம் செய்துள்ளார். ஸ்டெல்லா பாய் மீன் சந்தையில் இருக்கும் போது கிறிஸ்டோபர் வழி மறைத்து வெட்டு கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

   

ஸ்டெல்லா பாய்க்கு தலை மற்றும் கைகளில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் சாட்சி விசாரணை உள்ளதால் சிறைக்குச் செல்லும் அச்சத்தில் கிறிஸ்டோபர் மீண்டும் ஸ்டெல்லாவை தாக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.