SHOCK NEWS: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்…. தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 12 அதாவது நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக டிட்டோஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு அலுவலக பணிகளில் தோய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதன் விளைவாக, அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.