“உங்கள் பணத்தை இரட்டிப்பாக வேண்டுமா…?” போஸ்ட் ஆபீஸில் புதிய திட்டம்…. மிஸ் பண்ணாதீங்க….!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 1000 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த திட்டத்தில் 7.50 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 1.50 லட்சம் வரை வரி சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் போலவே முதலீட்டாளர்கள் முழு தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். பின் அதற்கான வட்டி காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். 5 வருட முதிர்வு காலம் முடிந்த பிறகு, வட்டியும் அசலும் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

  • 1 வருடம் டைம் டெபாசிட் – 6.9 %
  • 2 வருடம் டைம் டெபாசிட் – 7.0 %
  • 3 வருட டைம் டெபாசிட் – 7.1 %
  • 5 வருட  டைம் டெபாசிட் – 7.5 %

7.5 % வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு, 1 லட்சம் டெபாசிட் செய்தால், அதன் முதிர்வு தொகை  ரூ. 1,44,995 கிடைக்கும். அதாவது இதற்கான வட்டி மட்டும்  ரூ. 44,995. மேலும் இதே வட்டி விகிதத்தில் 5 லட்சம் டெபாசிட் செய்தால், இதன் முதிர்வுகால தொகையாக ரூ. 7.21 லட்சம் கிடைக்கும். இதே தொகையை மீண்டும் அதே திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 10.40 லட்சம் ஆக பெருகும். அதாவது நீங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் முதலீடு செய்தால், வட்டி மூலம் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்.

   

எப்படி விண்ணப்பிப்பது?

   

இதற்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு சென்று, படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையை சேர்த்து, இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.