“உங்களுக்கும் நோயின்றி வாழ ஆசையா…”? எப்படி ஹேர் வாஷ் பண்ணா….என்ன பலன் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கோங்க….!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

நம் முன்னோர்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று நாம் ஷாம்பு தேய்த்து குளிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் நற்பயன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளித்தால்…

   
  • உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை சமநிலைப்படுத்தும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • உடல் சூடு சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
  • இரைப்பை, இளைப்பு நோய்கள் குணமாக்கும்.
  • மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், சரும நோய்கள், அதிகப்படியான வேர்வை போன்றவை நீங்கும்.
  • உடலில் உள்ள ஐம்புலன்களின் பலத்தை அதிகரிக்கும்.
  • தலை, முழங்கால்களை உறுதியாக்கும்.
  • முடி நன்றாக கருத்து வளரும்.
  • தலைவலி, பல்வலி நீங்கும்.
  • தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
  • உடல் பலமாகும்.
  • சோம்பல் நீங்கும்.
  • நல்ல குரல் வளம் உண்டாகும்.
  • நாவின் சுவையின்மை நீங்கும்.