மிகப்பெரிய தொகை கொடுத்ததும் ரஜினியுடன் நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா.. அவர் சொன்ன காரணம் தான் ஹை லைட்..

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்பொழுதும் இவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.  இதைத்தொடர்ந்து  தனது மகளின் இயக்கத்தில் லால் ஸலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.


இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  இவ்வளவு படம் கைவசம் இருந்தாலும் இந்தியாவின் முன்னணி நடிகராக இவர் இருந்த போதும் இவரின் படத்தில் நடிப்பதற்காக ஒரு கதாநாயகி மறுத்தலித்து விட்டார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

   

இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் சேர்த்து வைத்திருந்த காலகட்டத்தில் இவரின் படத்தில் நடிப்பதற்காக நடிகை வை ஜெயந்திமாலா அவர்கள் கேட்டுள்ளார்களாம், ஆனால் இவர் முடியாது என்று சொல்லிவிட்டாராம். ரஜினி நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் இவர் மாமியார் கதாபாத்திரத்திற்கு அழைத்துள்ளார்கள், அதில் ரஜினி அவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வாய்ப்பை கைநழுவ விட்டாராம், இருப்பினும் மிகப்பெரிய தொகை கொடுக்கிறேன் என்று சொன்ன பின்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதை ரஜினி கூட தற்போது ஒரு மேடையில் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் நடித்து வெளிவந்த மாபெரும் படைப்பை படைத்தது. அதைத் தொடர்ந்து ரஜினியின் மருமகன் ஆன தனுஷ் அவர்கள் படத்தை ரீமேக் செய்து அதில் ஹன்சிகா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடிப்பு வெளியாகி மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றது.

author avatar
Ranjith Kumar