ஒரே துறையில் இருக்கிறோம்.. எங்கள் இருவருக்குள்ளும்.. விவாகரத்து குறித்த செய்திக்கு பதிலளித்த நடிகை ஷமிதா..

By Deepika on மார்ச் 14, 2024

Spread the love

Shamitha in pandavar bhoomi

 

பாண்டவர் பூமி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷமிதா. தோழா தோழா என அனைவரையும் முதல் படத்திலேயே கவர்ந்திழுத்த இவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். முதல் படத்திலேயே புகழ் வெளிச்சம் கிடைத்தாலும் அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

   
   

Pandavar Bhoomi shamitha and sree

 

 

சில காலம் காத்திருந்த ஷமிதா சின்ன திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதுவும் “சிவசக்தி” என்ற சீரியலில் சன் டிவியில் இவர் 2008 முதல் 2009 வரை நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவரோடு இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக, நடித்து இருந்தார்.

Shamitha Shree

முதல் சீரியலில் இவரோடு நடித்த ஸ்ரீகுமாரை 2009 ஆம் ஆண்டு ஷமிதா திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஷமிதா அதற்குப் பிறகு வசந்தம், பிள்ளை நிலா, புகுந்த வீடு, பொன்னூஞ்சல், மௌன ராகம், திருமகள், பேரன்பு, பொன்னி என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Shree about divorce

 

இந்தநிலையில் ஷமிதாவும் அவருடைய கணவர் ஸ்ரீயும் பிரிந்துவிட்டதாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து ஷமிதாவும் ஸ்ரீயும் விளக்கம் அளித்துள்ளனர், அவர்கள் கூறியுள்ளதாவது, ஸ்ரீ பேசுகையில் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்களா என்று என்னுடைய நண்பர்களே கேட்கிறார்கள். இது என்ன அர்த்தத்துல இப்படியெல்லாம் பேசுறாங்கன்னு எங்களுக்கு கொஞ்சம் கூட தெரியல. என்கிட்ட கேட்கிறவர்கள் கிட்ட உடனே நான் என் பொண்டாட்டிக்கு போன் பண்ணி தரேன் நீங்க பேசுறீங்களான்னு கேட்பேன். நாங்கள் இரண்டு பேரும் ஒரே துறையில் இருப்பதால் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

Shamitha about her divorce news

அதற்கு ஷமிதா நான் எந்த இடத்திலும் ஸ்ரீயின் வேலையில் தலையிட மாட்டேன். அதுபோல ஸ்ரீயும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்த கட்டளையும் போட்டது கிடையாது. என்னுடைய கேரக்டர் பற்றி அவருக்கு நல்லாவே தெரியும் அதனால் நிறைய இடங்களில் அவரும் எனக்கு விட்டுக் கொடுக்கிறார். எனக்கு அம்மா அப்பா வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி எல்லா இடங்களிலும் பிரீடம் கிடைக்கிறது. இதனால் வேலையையும் குடும்பத்தையும் நன்றாக பார்த்து கொள்ள முடிகிறது என கூறியுள்ளார் ஷமிதா.