குப்பையில் இருந்து குபேரன்.. லீக்கானது தனுஷ் படத்தின் கதை.. கடும் அப்செட்டில் படக்குழுவினர்..

By Deepika

Updated on:

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வரும் படம் தான் குபேரன்.

   

சமீபத்தில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தனுஷ் பிச்சைக்காரன் தோற்றத்தில் நிற்க குபேரன் என தலைப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தனுஷ் கார்ப்பரேட் தலைவராக இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுதான் குபேரன் படத்தின் கதை என ஒரு கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது மும்பை தாராவியில் நடக்கும் கதை. அங்கு பிச்சைக்காரனாக வாழும் தனுஷ், மிகப்பெரிய மாபியாவாக உருவெடுப்பாராம். அவரை பற்றி இன்வெஸ்டிகேட் செய்யும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறாராம். குப்பையில் இருந்து குபேரன் ஆகும் கதாநாயகன் தான் இந்த படத்தில் கதை என கூறுகிறார்கள்.

இதைப்பார்த்த தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்து விட்டார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இதுபோன்ற கதைகள் ஏராளமாக வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் ஏன் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கதை விறுவிறுப்பாக திருப்பங்களுடன் சென்றால் போதும் என கூறி வருகிறார்கள்.

சேகர் கம்முலாவின் படங்கள் எப்போதும் அருமையாக இருக்கும் அதேபோல் இந்த குபேரனும் நிச்சயம் அற்புதமாக வரும் என எதிர்பார்க்கலாம்.

author avatar
Deepika