BREAKING: VS பாபு உடல்நிலை….. சற்றுமுன் 5-வது அறிக்கை வெளியானது….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட VS பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனிடையே, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இத்தகைய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் VS பாபுவின் உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு அவரது உடல் நன்முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது உடல்நிலை குறித்துப் பரவி வந்த வதந்திகளுக்குத் தெளிவு கிடைத்துள்ளதோடு, அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டுமென நலவிரும்பிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.