மதுரையில் இன்று தவெக இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தொண்டர்கள் இரவில் இருந்தே கூட்டம் கூட்டமாக மதுரையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கணக்கே பண்ண முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் TVK முழக்கம் தான். இதனிடையே நள்ளிரவில் மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேட்டறிந்துள்ளார். இன்று விஜய் உரையாற்ற உள்ளது தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், இந்த மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து தொண்டர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு வரும் போதே சரக்கு வாங்கிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாநாட்டின் போதும் மாநாட்டு பந்தலில் தொண்டர்கள் மது அருந்தியது சர்ச்சையானது.
