மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து 5 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நகரத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் ‘ஸ்பைடர் மேன்’ உடை அணிந்து ஒரு நபர் மும்பையில் தேங்கியுள்ள வெள்ளத்தை அகற்றும் காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி நகைச்சுவையான தலைப்புடன் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இன்னும் நிறைய தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மும்பையின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தாததால் அதைக் குறித்தும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
