“பொறுத்து பார்த்தாச்சு.. இனி முடியாது”…. N.ஆனந்தை ஓரங்கட்டி விஜய்யை சந்திக்க ஓடும் மாஜி அமைச்சர்கள்… தவெகவில் வெடித்த திடீர் அதிருப்தி….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் மற்ற கட்சிகளில் இருந்து இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல மூத்த நிர்வாகிகளுக்குத் இதுவரை கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாததால் அவர்களுக்குள் அதிருப்தி புகையத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், அதிருப்தியில் உள்ள தலைவர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நேரடியாகச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள தவெகவில், அனுபவமிக்க மூத்த தலைவர்களின் இந்த அதிருப்திக் குரல்கள் கட்சியின் உட்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.