பெற்றோர்களே உஷார்..! கடையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காமவெறி பிடித்த ஆசிரியரின் பகீர் செயல்…!!

By Gayathri on ஆவணி 16, 2026

Spread the love

அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்த எமில் அகரோனோவ் என்ற 41 வயது ஆசிரியர், 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி காலை ஒரு கடையில் இருந்த அந்தச் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்துள்ளார். மேலும், தனக்கு ஒரு லத்தீன் மனைவி தேவை என்றும், அன்றைய இரவு தன்னோடு தங்குமாறும் தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் மேற்பார்வையில் அவர் வியாழக்கிழமை இரவு சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக மாற்றுப் பணிக்கு மாற்றியுள்ளதுடன், குற்றச்சாட்டுகள் உறுதியானால் அவர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆசிரியரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களும் அச்சமின்றி முன்வந்து புகாரளிக்க வேண்டும் என நியூயார்க் நகர காவல்துறை அவரது புகைப்படத்தை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.