“351 எம்.எல்.ஏ.. 59 எம்.பி”…. அன்புமணி போட்ட கணக்கு… தொகுதி மறுவரையறையால் வரப்போகும் மெகா மாற்றம்…. அதிர்ச்சியில் தவெக….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை 351 ஆகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆகவும் அதிகரிக்கும் என்பதால், இம்மாற்றத்தின் மூலம் அதிகப்படியான பெண் எம்பிக்களையும் அமைச்சர்களையும் நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காங்கிரஸின் அரசியல் அழுத்தம் காரணமாகவே தமிழக வெற்றிக் கழகம் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது என்று விமர்சித்த அவர், நாட்டின் தற்போதைய சூழலில் முறையான தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.