தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அவருக்குப் பலமான ஆதரவு இருந்தபோதிலும், திருச்சியை அவர் தேர்வு செய்யப் பல முக்கிய அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சியில் களமிறங்குவதன் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் 90,000-க்கும் அதிகமான சிறுபான்மையின வாக்குகளைக் கொண்ட ஒரு முக்கியத் தொகுதியாகும். இதில் சுமார் 60,000 கிறித்தவ வாக்குகளும், 30,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வாக்குகளும் அடங்கும். சிறுபான்மையின மக்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதன் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என்பதே விஜய்யின் கணக்காக இருக்கிறது. ஏற்கனவே விஜய் அங்கு சென்றபோது கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு, தொண்டர்களிடையே கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜுக்கும், மாவட்ட அமைச்சர்களுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, திமுகவின் வாக்கு வங்கியில் அதிர்வுகளை ஏற்படுத்த தவெக திட்டமிடுகிறது. மேலும், இந்தத் தொகுதியில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், விஜய்யின் திரையுலகப் பின்புலம் அவர்களுக்கு ஈர்ப்பாக இருப்பதும் தவெக-விற்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், திமுகவின் கோட்டையான திருச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் செல்வாக்கை மீறி விஜய் வெற்றி பெறுவது ஒரு சவாலான காரியமாகவே இருக்கும். விஜய் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து திமுக தனது பலமான வேட்பாளரைக் களமிறக்கத் தயாராகி வரும் நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி 2026 தேர்தலின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…