காந்த பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியல் அர்ச்சனா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

காந்த பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியல் அர்ச்சனா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவர் முதன்முதலில் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவரின் மனதிலும் தனது அழகாலும், சிரிப்பாலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவராம். இவர் டிக் டாக் மூலமாக அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் இப்பொழுதும் அதே போட்டோ ஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டே தான் வருகிறார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர் திடீரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். இதற்கு பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை.  தற்போது அவர் அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அர்ச்சனா. தற்பொழுது இவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை அர்ச்சனாவா இது?’ என வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.

Begam