அம்மாவை தாண்டி வளர்ந்த மகள்… நடிகர் அஜித் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்… வாவ் செமையா இருக்கே…

அம்மாவை தாண்டி வளர்ந்த மகள்… நடிகர் அஜித் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்… வாவ் செமையா இருக்கே…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘தல 62’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திரைப்படம் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை இணையத்தில் வெளியாகவில்லை.  இதை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தங்களுடைய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அஜித்தின் மகள் அனோஷ்கா தனது அம்மா ஷாலினியையும் தாண்டி வளர்ந்துவிட்டாரே’ என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

Begam