“இவ்ளோ ஆடம்பரமா திருமணம் செஞ்சுட்டு உடனே பிரிஞ்சதுனால”.. விவாகரத்து பற்றி பல வருடம் கழித்து மனம் திறந்த விஜே ரம்யா..!!

By Nanthini on மார்கழி 11, 2023

Spread the love

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவராக மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே ரம்யா. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ரம்யா முதலில் தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்த இவர் மொழி, மங்காத்தா மற்றும் மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

   

இப்படி பிசியாக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி அபர்ஜீத் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் அவருடன் சேர்ந்து வாழ தனக்கே விருப்பம் இல்லாததாலும் எங்களது திருமண வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்ததால் சத்தம் இல்லாமல் பிரிந்து விட்டோம் என ரம்யா கூறியிருந்தார்.

   

 

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ரம்யா தற்போது தனது விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது, லட்சக்கணக்கில் செலவு செய்து மிக ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு யாராவது bye சொல்லிவிட்டு பிரிந்து விட விரும்புவார்களா. ஆனால் அதற்கு ஒரு அழுத்தமான காரணம் ஏதாவது இருந்தால் கட்டாயம் இது தான் நடக்கும். என்னுடைய விவாகரத்திலும் இது போன்ற காரணம் இருந்தது.

உதாரணத்திற்கு ஆறு மாதங்கள் ஒரு  வேலை செய்துவிட்டு திடீரென எனக்கு போர் அடித்து விட்டது எனக் கூறிவிட்டு ஓய்வு எடுத்தால் ஏன் வீட்டில் இருக்கிறாய் என்ன காரணம் என அடுத்தடுத்து பல கேள்விகளை முன் வைப்பார்கள். அதனைப் போலவே திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிவிட்டாலும் சரி உடல் எடை குறைந்துவிட்டாலும் சரி ஏனென்றால் நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி வாழ்க்கையில் தொடர்ந்து அடுக்கடுக்கான பிரச்சனைகள் இருக்கும் என ரம்யா மனம் திறந்து பேசி உள்ளார்.