விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது . தற்பொழுது வரை பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. வாரம் ஒரு போட்டியாளர் எவ்வாறு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாரோ அதேபோல பிக் பாஸ் வீட்டின் தலைவராகவும் ஒரு போட்டியாளர் நியமிக்கப்படுவது வழக்கம்.

இதற்காக போட்டிகள் நடத்தி பிக் பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பார் பிக் பாஸ். அந்த வகையில் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இவர் தலைமை பொறுப்பை ஏற்காத நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு இவரின் தலைமையின் கீழ் எப்படி இருக்க போகிறது? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
