நான் தான் பல்லவி.. கார்த்திக்கிடம் உண்மையை உளறிய தீபா.. அடுத்து நடந்தது என்ன?.. பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம்..!!

By Nanthini

Published on:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் 9 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவை ஒரு இடத்திற்கு வரவைத்து கார்த்திக்கிடம் ஒரு பெண்ணை பல்லவியாக அறிமுகம் செய்து வைத்தார்.

   

இதனைத் தொடர்ந்து இது குறித்து அறிந்த தீபா கோபமாகவும் வேக வேகமாகவும் தனது கணவரிடம் வந்து இந்த பொண்ணு சொல்றது எல்லாம் பொய் நான் தான் உண்மையான பல்லவி என்று உண்மையை கூறுகிறார். இதனை அறிந்த கார்த்தி ஏன் இவ்வளவு நாளா இதை சொல்லல நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்று தீபாவிடம் கோபப்படுகிறான். அதன் பிறகு உண்மை கார்த்திகைக்கு தெரிந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என்று தீபா நினைத்துப் பார்த்தது தெரிய வருகின்றது.

அதேசமயம் கார்த்திக் கூட நான் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து தீபா உண்மையை சொல்லாமல் அப்படியே மறைத்து விடுகிறார். ரூபஸ்ரீ இடம் நீ உண்மையை சொல்லாததே நல்லதே என்றும் தீபா கூறுகிறாள். இந்த இடத்தில் மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஒழிந்து இருப்பது அனைத்தையும் பார்த்த தீபா இவை அனைத்தும் அவளுடைய திட்டம் தான் என அறிகிறார். இப்படி இன்றைய எபிசோடு முடிவடைய அடுத்து என்ன நடக்கப் போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Nanthini