Categories: CINEMA

‘இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?’… பிரபல முன்னணி கிரிக்கெட் வீரருக்கு விஷ்ணு விஷால் அதிரடி கேள்வி….

கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டிய இவர் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே விஷ்ணு விஷால் இறுதியாக கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக மோகன்தாஸ், லால் சலாம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் பதிவிற்கு ட்விட்டரில் அவர் எழுப்பியுள்ள கேள்வியானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது ‘ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று சேவாக் பதிவிட்டுள்ளார்.  தற்பொழுது இதற்கு  டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகர் விஷ்ணு விஷால் ‘மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவரின் பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Begam

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

6 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago