தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.
இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.
இவர் தற்பொழுது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஃபால்(Fall) என்ற வெப் சீரியஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகை அஞ்சலி பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது நடிகை அஞ்சலி தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்குட்டியின் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் அவ்வப்பொழுது தனது நாய்க்குட்டியுடன் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
எல்லா நடிகைகளும் தங்களது வீட்டில் செல்லப்பிராணிகள் வைத்துள்ளார்கள். அப்படி நடிகை அஞ்சலி தனது வீட்டில் போலோ என்ற பெயரில் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறார். இது மால்திஸ் என சொல்ல கூடிய ஒருவகை நாய் இனமாகும். இது இந்தியாவில் ₹40,000 முதல் ₹90,000 வரை விற்கப்படுகிறது.
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…