Categories: சினிமா

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

Spread the love

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை பல ஆண்டுகாலமாக தயாரித்து வரும் நிலையில் இப்படத்தின் மீது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கும் தயாராகி இருக்கின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் நேற்று வெளியானதை தொடர்ந்து பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஷங்கரின் ஸ்டைலில் பிரம்மாண்டமாக கமலஹாசன் பல கெட்டப்புகளில் மிரட்டலாக இருக்கின்றார். இந்த முன்னோட்ட காட்சியில் 106 வயதான இந்தியன் தாத்தா பறந்து பறந்து சண்டை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இது எப்படி சாத்தியமாகும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இது குறித்து சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியன் தாத்தா வயது இந்த படத்தில் 106. இத்தனை வயது கடந்த ஒருத்தரால் சண்டை போட முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியும். சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் லூஸி ஜியோ என்று ஒருவர் இருக்கின்றார். அவருக்கு 106 வயதாகின்றது.

இவர் தற்போது மார்சில் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். அனைத்து விதமான சண்டைகளையும் அவர் செய்து வருகின்றார் அவர் பறந்து பறந்து அடிக்கக்கூடிய ஒரு நபர். அதேபோலதான் இந்தியன் தாத்தா சேனாதிபதி கேரக்டர். வர்மக்கலையில் மாஸ்டர் ஆன அவர் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு கொண்டவர். தினமும் யோகாசனம் செய்பவர்.

முறையான ஒழுக்கம், சாப்பாடு பழக்கம் கொண்ட ஒருவரால் எதையும் செய்ய முடியும். கண்டிப்பாக அவர்களுக்கு வயது ஒரு தடையாக இருக்காது . எந்த வயதிலும் எந்தவிதமான சண்டையையும் செய்யலாம் என்று விளக்கம் கொடுத்திருக்கின்றார் சங்கர். இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இது திரைப்படத்தை எதிர்பார்த்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

6 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago