கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டிய இவர் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே விஷ்ணு விஷால் இறுதியாக கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக மோகன்தாஸ், லால் சலாம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் பதிவிற்கு ட்விட்டரில் அவர் எழுப்பியுள்ள கேள்வியானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது ‘ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
I have always believed a name should be one which instills pride in us.
We are Bhartiyas ,India is a name given by the British & it has been long overdue to get our original name ‘Bharat’ back officially. I urge the @BCCI @JayShah to ensure that this World Cup our players have… https://t.co/R4Tbi9AQgA— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று சேவாக் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இதற்கு டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகர் விஷ்ணு விஷால் ‘மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவரின் பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
