மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி.! 100 கோடி கலெக்ஷன் நடிகையை தட்டி தூக்கிய விஷ்ணு விஷால்..

By Ranjith Kumar

Published on:

லால் சலாம் படத்தில் முன்னணி நடிகராக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்த வைத்திருப்பவர் தான் தான் “விஷ்ணு விஷால்”. முதல் முதலில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த விஷ்ணு விஷால் அவர்கள், சினிமாவில் ஆர்வம் கொண்டு 2009 ஆம் ஆண்டு புது இயக்குனரான சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன், கிஷோர், பரோட்டா சூரி ஆகியோர் நடிப்பு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படம் மூலம் சினிமா துறையில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்தார் விஷ்ணு விஷால்.

அதன் பின்னதாக குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என்று மிகப்பெரிய படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் வளர்ச்சி அடைந்து கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்த சிறந்த நடிகர் என்று பல இயக்குனர்களின் முன்னால் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

   

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், ரஜினியுடன் இணைந்து நடித்த லால் சலாம் படத்திற்கு பின் இவருக்கு பல படங்கள் வந்து குவிய ஆரம்பித்தது, அந்த வரிசையில் தான் இவர் 2018 ஆம் ஆண்டு ராம்குமார் அவர்கள் கூட்டணியில் க்ரைம் திரில்லர் கலவையில் நடித்து உருவாகி, மாபெரும் படைப்பாக மாறிய படம் தான் “ராட்சசன்”. தற்போது இவர் மீண்டும் ராம்குமார் அவர்களுடன் கூட்டணி இணைந்து VV 21 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாளத்தில் வெளியான ரீபல், பிரேமல போன்ற முன்னணி படங்கள் பிரபல நடிகையாக நடித்து வரும் மமிதா பைஜு அவர்கள் VV 21 வது படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போதைய கொடைக்கானலில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடுகிறேன் என்று ராம்குமார் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். கோடை மாசத்திற்கு பின்பு இப்ப படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Ranjith Kumar