தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் AR முருகதாஸ். இவர் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் என்ற படத்தின் துணை இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின்னதாக 2000 எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்து, 2001 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து முதன் முதலாக தீனா என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் தான் சிறந்த இயக்குனர் என்று அறிமுகமானார்.
அதன் பின்னதாக கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரபல நடிகர்களை வைத்து பல பிரம்மாண்ட படங்களை உருவாக்கி வெளியிட்டு இருந்தார், அந்த வரிசையில் விஜய் நடிப்பில் உருவான கத்தி, துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களாகும். இந்த நிலையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஸ்பைடர், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படங்கள் இவருக்கு சரியாக கை கொடுக்காமல் இருந்த நிலையில், சில நாட்கள் சினிமா துறையில் இருந்து வெளியேறி இருந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து SK 23 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களின் கூட்டணி புதுசாக இருப்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போதைய படம் முடிந்த பின் மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சல்மான் கான் அவர்கள் வைத்து படம் இயக்க உள்ளாராம்.
சாஜிட் நாடிட் வாலா அவர்கள் இப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளாரென்று தெரிவித்திருக்கிறார்கள். அமீர்கான் உடன் கஜினி படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்த பின், மீண்டும் பாலிவுட்டில் மீண்டும் முருகதாஸ் அவர்கள் இறங்கியுள்ளதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.