தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இயக்குனர் அவர்கள் தற்போது சில தினங்களுக்கு முன்னால் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று தகவல் தெரிவித்து இருந்தார். அந்த நிலையில் முதல் சிங்கிள் காண அப்டேட் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தில், யுவன் இசை அமைப்பில் முதல் சிங்கிள் பாடலை வெளியிட போவதாக தகவல் கசிந்துள்ளது. அந்த முதல் பாடலை விஜய் அவர்களே பாடியுள்ளார் என்றும், அதில் மிகச் பிரமிக்கக்கூடிய சர்ப்ரைஸ் என்னவென்றால்.! விஜயுடன் அப்பாடலில் இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து பாடியுள்ளார்களாம். இவர்களின் காம்போவில் உருவாகும் பாடலின் வெளிப்பாடு வார்த்தையில் சொல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய படத்தில் விஜய் அவர்கள் மிகச் சிறந்த பாடகர்கள் போல் தன் முழு திறமையாலும் தன் இனிமையான குரலினாலும் பாடலை சிறப்பாக பாடியுள்ளாராம். அதற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெருமிதமாக கூறியுள்ளார். இதற்கு முன்னால் பலரும் பாராட்டியுள்ளார்கள். அந்த வரிசையில் அனிருத் அவர்களும், இதற்கு முன்னால் லியோ படத்திலும் அனிருத் இசையில் நான் ரெடி தான் வரவா என்ற பாடலை விஜய் அவர்கள் ஒரு மணி நேரத்தில் பாடி முடித்து கொடுத்து விட்டாராம். அதை கண்ட அனிருத் மிரண்டு போனாராம்.
கைதேர்ந்தவர்களால் கூட இப்படி பாடுவதற்கு சாத்தியமற்றது, பல வருடங்களாக பாடும் பாடகர்களை விட மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் என்று அனிருத் மிகப் பெருமிதமாக விஜய் அவர்களை புகழ்ந்து தள்ளினாராம். இப்பாடலின் சிறப்பாக அமைவதற்கு மிகச்சிறந்த வழி நடத்துதலே ஆகும் என்று அனிருத்தை விஜய் பாராட்டியுள்ளாராம்.