150 கோடி வசூல் செய்தும் OTT-யில் விலை போகாத மஞ்சுமெல் பாய்ஸ்.. ஓ.. இதான் காரணமா.!

By Ranjith Kumar

Published on:

மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது,


தற்போது தமிழில் இது மிக சிறப்பாக ஓடி தற்போது தமிழில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதே போல் ஓடி பெரிதலாக பெயரை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிக் குவித்துள்ளது, வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக அளவில் இதை வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இந்திய அளவில் ஒரு மாத காலமாக ஓடி, 146 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளது, தற்போது இது ஓடும் ஓட்டத்தை பார்த்தால் 150 கோடி வரை தொட்டுவிடும் என்று தெரிகிறது, மஞ்சுமா பாய்ஸ் படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதால், இப்படத்தின் வரவேற்பு மிகப்பெரியதாக உள்ளது, அதனால் இப்படம் எப்போது OTT தளத்திற்கு வரும் என்று பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

அதைத் தொடர்ந்து நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு OTT நிறுவனங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்பட வெற்றியினால் மிதப்பில் திரியும் பட குழு படத்தின் OTT உரிமத்தை பல கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளார்கள். அதனாலேயே பல நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட 20 கோடிக்கும் மேல் விற்பனை செய்ய திட்டமிட்டதால் உள்ளதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இப்படத்தை தொடர்ந்து வெளிவந்த பிரேமலு, பிரேமயூகம் போன்ற படங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது.

பேராசை பட்டதால் மஞ்சமல் பாய்ஸ் படம் நிலை தடுமாறி வருகிறது. ஆனால் தற்போது ஒரு OTT நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து இருவருக்கும் சமமாக ஒரு மதிப்பை பேசி படத்தை அந்த நிறுவனத்திற்கு விற்று விடுவார்கள் என்று தெரிய வருகிறது. இப்படத்தின் மாபெரும் எதிர்பார்ப்பு OTT-க்கு வந்த பின்பும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar