விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷ்ணு விஷால். இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் மற்றும் விஜய் விருதுகளை வென்றார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு குள்ளநரி கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷ்ணு விஷால். அதைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, நீர் பறவை, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி, லால் சலாம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் விஷ்ணு விஷால்.
தனது எதார்த்தமான நடிப்பிற்காக அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தயாரிப்பதாக கூறியிருந்தார். இந்த திரைப்படத்தை முரளி கார்த்திக் இயக்கியிருந்தார்.
மோகன்தாஸ் என்ற திரைப்படம் பாதிக்கு மேல் சூட்டிங் சென்று விட்டது. இந்த படத்திற்காக விஷ்ணு விஷால் 13 கோடி வரை செலவு செய்திருந்தார். ஆனால் இயக்குனர் ஏதோ சொல்லப் போக விஷ்ணு விஷால் எப்படி இந்த படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நான் என்னிடம் இப்படி அவர் பேசுவாரா என்று ஈகோ கிளாஸ் ஆனதால் அந்த படத்தை அப்படியே வேண்டாம் என்று கிடப்பில் போட்டு விட்டாராம் விஷ்ணு விஷால். அதுமட்டுமில்லாமல் செலவு செய்த 13 கோடியும் வேண்டாம் என்று விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.