சிம்பு கொடுத்த அட்வைஸால் தான் வாழ்க்கையில எல்லாமே மாறுன்னுச்சி … நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!

By Nanthini on மாசி 14, 2025

Spread the love

லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த வெளியாகியுள்ள திரைப்படம் தான் டிராகன். இந்த திரைப்படத்தில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ் மற்றும் சித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன்பு உவமை கடவுளே என்ற படத்தை இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காதலர் தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் விடாமுயற்சி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனதால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

டிராகனில் இது அல்டிமேட்டா இருக்கும்!.. செம ஹைப் ஏத்துறாங்களே!... | director  mysskin scored in dragon movie

   

இப்படியான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனரும் பாடல் ஆசிரியரும் மாணவிக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்தை குறும்படங்கள் எடுத்த காலத்தில் இருந்து நன்றாக தெரியும். பிரதீப் ரங்கநாதன் என்னுடைய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் லியோனி இசையில் இதற்கு முன்னர் நான் எழுதிய பாடல் வரிகளை எனக்கே தெரியாமல் மாற்றி விட்டனர்.

   

Vignesh Sivan wished Pradeep Ranganathan on behalf of his birthday | LIK :  லவ் டுடே நடிகரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!

 

திமிரு காட்டாதடி பாடலை நான் எழுதும் போது முதலில் ஃபிலிம் காட்டாதடி என்றுதான் எழுதினேன். ஆனால் லியோன் அதனை திமிர் காட்டாதடி என்று மாற்றி உருவாக்கி விட்டார். ஆனால் டிராகன் படத்தில் நான் எழுதிய பாடலை திருத்தம் எதுவும் செய்யாமல் உருவாக்கியுள்ளனர். போடா போடி படத்தில் மாட்டிக்கிட்டேன் என ஒரு பாடல் வரும். அந்த பாடலை எங்களால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு எடுக்க முடியவில்லை.

எல்லாத்துக்கும் காரணமே சிம்புதான்.. நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் பேச்சு! |  Nayanthara Husband Director Vignesh Shivan Talks About STR Simbu On Dragon  Pre Release Event - Tamil Filmibeat

அப்படி இருக்கும் போதே சிம்பு சார் என்னை கூப்பிட்டு, டேய் விக்கி நீ பாட்டு எல்லாம் நல்லா தான் எழுதுற, ஆனால் அதுல மாட்டிக்கிட்டேன் ஒரு வார்த்தையை எழுதி இப்ப பாரு ஒன்றரை வருடங்களாக பாடலை முடிக்கவில்லை என்று கூறினார். அதிலிருந்து எந்த பாடல் எழுதினாலும் கவனமாக எழுதுவேன். நான் பாடல் எழுதிய தொடங்கிய போது சிம்பு சார் தான் நீ நல்லா எழுதற நீயே பாட்டு எழுது என்று ஊக்குவித்தார். ஆரம்பம் படத்தில் எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் என்று எழுதிய பிறகு தான் எனக்கு படம் கமிட் ஆனது, என்னுடைய வாழ்க்கையை மாறியது என்று சிம்பு தனக்கு கொடுத்த அட்வைஸ் பற்றி விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.