அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கார் ரேசராகவும் இருக்கிறார். தனது 18 ஆவது வயதில் கார் ரேசிங்கில் பங்கேற்க தொடங்கினார் அஜித்குமார்.அதே நேரத்தில் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித்குமார் காதல் மன்னன், வாலி, காதல் கோட்டை, பூவெல்லாம் உன் வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார் அஜித்குமார். 2000 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
என்னதான் நடிகராக ஆனாலும் அவ்வப்போது கார் ரேசிங்கிலும் பங்கேற்பார் அஜித்குமார். தற்போது இவரது அணி கூட துபாயில் நடந்த கார் ரேசிங்கில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்தது. மேலும் இவருக்கு இந்த வருடம் இந்தியாவின் பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தை தயாரித்தது LYCA நிறுவனம் தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் பெறவில்லை. உலக அளவில் ஒட்டுமொத்த வசூலே 100 கோடி பக்கம்தான் இருக்கிறது. அதனால் லைக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறது. அது என்னவென்றால், மலையாளத்தில் முரளி கோபி எழுத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் திரைப்படம் எம்புரான். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தை தயாரிப்பதும் LYCA தான்.
ஆனால் விடாமுயற்சி கை கொடுக்கவில்லை என்பதால் எம்புரான் படத்திற்கு சரியான நிதியை LYCA வால் கொடுக்க முடியவில்லை. ஆனால் படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக மோகன் லால் பிரித்விராஜ் ஆகியோர் சம்பளமே இல்லாமல் விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இதன் மூலம் அஜித் நடித்த விடாமுயற்சியினால் பாதிப்படைந்தது மோகன்லால் பிரித்விராஜ் ஆகியோர்தான்.