விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராகவர். இவரது இயற்பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும். இவரது தந்தை பிரபலமான தயாரிப்பாளர் ஜி. கே ரெட்டி ஆவார். ஆரம்பத்தில் விஷால் நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜுனிடம் உதவி இயக்குனாக பணிபுரிந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து சண்டக்கோழி திமிரு தாமிரபரணி போன்ற ஆக்சன் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார் விஷால். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விஷால்.
தொடர்ந்து அவன் இவன் பாண்டியநாடு பட்டத்து யானை பூஜை சத்தியம் மருது, துப்பறிவாளன் இரும்புத்திரை சண்டக்கோழி 2 வீரமே வாகை சூடும் மார்க் ஆண்டனி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால். இவர் நடித்தவைகளில் துப்பறிவாளன் திரைப்படம் மிக முக்கியமானது ஆகும். இது வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது.

ஏற்கனவே விஷால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை தானே இயக்கி நடிப்பதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்திற்கான பைனான்சியர் தேடினாலும் அவருக்கு அமையவே இல்லையாம். அதனால் இந்த படத்தின் பணிகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு மறுபடியும் நடிக்கலாம் என்று இயக்குனர்களை தேடிப்போய் இவரே கேட்கிறாராம். சமீபத்தில் இயக்குனர் ஹரியிடம் சென்று நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறி இருக்கிறாராம் விஷால். என்ன இவரது நிலைமை இப்படி ஆயிற்று என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
