siva

ஒரே படத்தினால் ஓஹோ என்றான சிவகார்த்திகேயன்… திடீரென சம்பளத்தை உயர்த்தியதால் கலங்கும் தயாரிப்பாளர்கள்…

By admin on மார்கழி 21, 2024

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

   

ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் படங்களில் நடித்தார். வேலைக்காரன் சீமராஜா மாவீரன் டான் போன்ற நல்ல கதை கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார் சிவகார்த்திகேயன்.

   

தற்போது தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

அமரன் படத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டின் ஷேர் 70 கோடி ரூபாய் கிடைத்ததால் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் 70 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் ஓரளவு நன்றாக சென்றுவிட்டால் சிவகார்த்திகேயனின் சம்பளம் 100 கோடி ஆகலாம் என்று கூறுகிறார்கள். இவரின் திடீர் சம்பள உயர்வால் தயாரிப்பாளர்கள் எல்லாம் விழிப்பிதுங்கி இருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.