king

மங்கோலிய பேரரசர் கெங்கிஸ்கானின் வெற்றிக்கு காரணம் புழுக்களா…? அப்படி அதுல என்ன இருக்கு…!

By admin on மார்கழி 21, 2024

Spread the love

கென்கிஸ் கான் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மங்கோலிய பேரரசர் ஆவார். உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலத்தை கொண்டிருந்த மன்னர் ஆவார். வேட்டையாடி உணவு உண்ணும் பழங்குடியை சேர்ந்த கென்கிஸ் கான் தனது இளம் பருவத்தில் மங்கோலிய பேரரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார். இது மட்டுமல்லாமல் உலக வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த குறிப்பிடத்தக்க ராணுவ தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

   

கென்கிஸ் கான் ஒரு புரிந்துகொள்ள இயலாத அரசராக இருந்திருக்கிறார். தனது ஆதரவாளர்களுக்கு ஈகை கொண்டவராகவும் கடுமையான விசுவாசத்தையும் கொடுத்தார். தன்னுடைய எதிரிகளுக்குக்கமற்றவராக இருந்திருக்கிறார். உலகை ஒரு நாடாக தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கை அடைய தீவிரமாக பயணித்தவர் கெங்கிஸ் கான். இவரது ராணுவம் லட்சக்கணக்கானவர்களை கொன்றிருக்கிறது. இவரது ராணுவ வெற்றிகள் உலகின் பெருமளவு வணிகம் மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்கான மாற்றங்களை ஏற்படுத்தியது.

   

மிகவும் காட்டுமிராண்டித்தனமான கொடுங்கோலனாகவும் மேற்குலக நாடுகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளை கொண்ட கலவையான மனிதராகவும் இருந்திருக்கிறார் கென்கிஸ் கான். மங்கோலியாவில் இவரை தெய்வமாக வணங்குகின்றனர். பல நூற்றாண்டுகளாக சமய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். இப்படி மிகவும் பராக்கிரமம் பொருந்தியா அரசராக இருந்த கெங்கிஸ்கான் வெற்றிக்கு புழுக்கள் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

 

கெங்கிஸ்கானில் வெற்றிக்கு பெருமளவு பங்கு வகித்தது இந்த புழுக்கள். விலங்குகளின் உடல்கள் நாள்பட்ட புண்கள் மீது நெளியக்கூடிய அருவருப்புடன் நாம் பார்க்கக்கூடிய புழுக்கள் தான் அவர் ராணுவத்தில் பயன்படுத்தியது ஆகும். 11 ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஒரு உலகையே ஒரு கொடியில் கட்டி ஆளும் ஒரு லட்சியத்துடன் பயணித்துக் கொண்டிருந்த கெங்கிஸ்கான் பெரும் படையை மட்டும் அல்ல இந்த புழுக்களையும் தான் தன் கையோடு எடுத்து சென்று இருக்கிறார்.

தனது இளம் வயதிலேயே போர்க்களத்திற்கு சென்ற கெங்கிஸ்கான் மாபெரும் வெற்றிக்கு பின்னால் அவரது படைவீரர்களின் நலனில் அவர் பெரும் அளவு அக்கறை எடுத்துக் கொள்பவர். போர்க்களத்தில் எதிரிகளால் காயப்பட்ட வீரர்களை குணப்படுத்த இந்த புழுக்களையே அவர் பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பது மங்கோலியர்கள் அப்போது அறிந்திருந்தார்கள். அதை தன கெங்கிஸ்தான் பின்பற்றினார்.

இதனால் இவரது ராணுவ படை வீரர்கள் விரைவில் குணமடைந்து அழிக்க முடியாத ஒரு சக்தியாக இருந்தது. எதிரிகளுக்கு இந்த யுக்தி தெரியாததால் அவர்கள் செத்து மடிந்தனர். அந்த காலகட்டத்தில் புழுக்களை தங்கள் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். காலப்போக்கில் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கர்கள் பல வகையான பெனிசிலின் போன்ற மருந்துகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தனர். ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்ட கெங்கிஸ்கான் ஒரு சிறு புழுவை வைத்து தனது வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறார்.